கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத் தொடரில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் விவகாரம் காவல்துறையின் கவனக்குறைப்பால் நடைபெற்றது என வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில்,,,
கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது இந்த சூழலில் அது தொடர்பான விளக்கம் தமிழக அரசு கொடுத்தால் எப்படி திருப்தியாக இருக்கும்..
சிபிஐ விசாரணை மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்..
முதலமைச்சர் சம்மதமே இல்லாமல் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறார். அவரிடம் பதற்றம் ஏற்படுகிறது, கூட்டணி வலுவாக அமைந்து விடுமோ என்ற கவலை முதலமைச்சரிடம் தெரிகிறது…
பாதிக்கப்பட்ட மக்களுடன் கவலை முதலமைச்சரிடம் இல்லை என தெரிவித்தார்.