வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவன் கார் டூவிலரை இடிப்பது வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது, அந்த நபருக்கு பின்னால் நான் இருப்பதாக திருமாவளவன் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உருட்டல் மிரட்டல் எல்லாம் தன்னிடம் வேண்டாம் என்றும், ஒரு அடி அடித்தால் தான் இரண்டு அடி அடிக்கும் ஆள் என்றும் அவர் கூறினார்.
போலீசில் இருந்து பல ரவுடிகளை பார்த்து வந்தவன் நான். இந்த வேலை எல்லாம் தன்னிடம் வைத்து கொள்ளாதீர்கள் என்றும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்
திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்றும், வன்முறை அரசியலால் யாருக்கு லாபம்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.