தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமாகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்து சாய்ந்தது.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விளைநிலத்தில் சாய்ந்து உள்ள பயிர்களை அறுவடை செய்யும் போது மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்திக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.