தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் திருப்பணிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கோயில் குடமுழுக்கு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் கோயில் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.