தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேருராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் அலுவலகம் மேலமருத்துவக்குடி பகுதியில் உள்ளது.
கடந்த மாதம் 5-ம் தேதி இந்த அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் இருந்தபோது கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் தாக்கியும் கொலை செய்ய முயன்றது.
ஆனால், நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் தப்பினார். இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்ட மருதுபாண்டியன், மகேஷ் உள்ளிட்ட ஆறு பேர், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.