மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் மாசடைந்த கிணற்று நீரை பருகிய நூற்றுக்கணக்கானோருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
சிந்த்வாராவின் ராஜோலா கிராமத்தில் உள்ள கிணற்றின் மாசடைந்த தண்ணீரை குடித்த 150 குடும்பங்களை சேர்ந்த 60 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிணற்று தண்ணீரை குடித்த நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கிணற்று தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்தபோது 4 புறாக்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.