புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கோ பிஃரி என்கிற சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் எழுந்தன.
இதன்பேரில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்திய சைபர் கிரைம் போலீசார், போலி ஆவணங்கள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.
அப்போது, சைபர் கிரைம் போலீசாருக்கு தான் 80 லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமத் வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.