போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரம் ஆப்கான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. மேலும் காந்தகாரில் வான்வழித் தாக்குதல்களிலும் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைகளில் தாலிபான்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்கள் ஏற்பட்டன. ஆப்கானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, முதல்முறையாக அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில், ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த மோதலில், 200-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்றதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மீண்டும் இருதரப்பினரும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தப்படுவதாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காபூலின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தம்செய்வதாகப் பாகிஸ்தான்ன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஓட விட்ட தாலிபான்களின் வெற்றியை, ஆப்கான் மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தலிபான்களின் தளபதிகளைக் குதிரையின் மேலேற்றி ஊர்வலமாக அழைத்து வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பயத்தில் எல்லையை விட்டு ஓடிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் பரிதாப நிலையை இந்த வீடியோவில் காண முடிகிறது.
எல்லைச் சாவடிகளைத் தாக்குவதையும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் கைப்பற்றுவதையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தலிபான்கwf அவமானப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகிறது. கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் ஆடைகளைக் களைந்து தெருக்களில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்டை கழற்றி அதைவெற்றிக்குக் கொடியாக சுழற்றி தாலிபான்கள் ஆட்டும் காட்சிகள் வேகமாக வைரலாகி வருகின்றன. ஏராளமான தாலிபான் ராணுவ வாகனங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் விரைவில் முழு அளவிலான போர் மூளும் அபாயம்உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.