மதுரை மாநகராட்சியின் மாமன்ற அவசர கூட்டம் தொடங்கிய 4 நிமிடங்களில் நிறைவு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கின் எதிரொலியாக மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திராணி வழங்கி ராஜினாமா கடிதம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.
துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இந்திராணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக துணை மேயர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, மாமன்ற கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
மாமன்ற கூட்டம் தொடங்கிய 4 நிமிடங்களில் நிறைவு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாநகராட்சி 45வது வார்டு அதிமுக உறுப்பினர் சண்முகவள்ளி தர்ணாவில் ஈடுபட்டார்.
அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்ட அரங்கில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால், கூட்ட அரங்கு இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பதற்றம் நிலவியது.