ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்காவிட்டால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் கீனோஸ் தரப்பு வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவின் இறுதி தீர்ப்பு வரும் வரை வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க மாட்டோம் என காவல்துறை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நிலைப்பாடு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அவமதிப்பது போல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கின் ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.