ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி நெல்லை மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 900 பேர் பணியாற்றி வரும் நிலையில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த 20 மாதங்களாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு தொகை தற்போது வரை கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.
மேலும், தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக வழங்கக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.