ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு அமைதியை நிலைநாட்ட விருப்பமில்லை என ஜெலன்ஸ்கி அதிபர் ட்ரம்பிடம் குற்றம்சாட்டியதாகவும் கூறப்படுகிறது. எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளதாகவும், உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து புளோரிடா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சிறந்த சந்திப்பை நடத்தியதாக கூறினார். உடனடியாக உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்தைத்தான் ரஷ்ய அதிபர் புதினிடமும் ஏற்கனவே பேசினேன் எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.