ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை பாதுகாப்புப்படைக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் , உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், பிரமோஸ் ஏவுகணை வெறும் ஏவுகணை மட்டுமல்ல, அது இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டுத் திறன்களின் சின்னம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது வெறும் டிரைலர்தான் எனக்கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வட்டத்திற்குள்ளேயே உள்ளன என்றும் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.