டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட உள்ளது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டுக் கண்டுபிடிப்பு கருவி உள்ளிட்டவற்றை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சரோஜினி நகர் சந்தை பகுதியில் போலீசார் கொடி அணி வகுப்பும் மேற்கொண்டனர்.