சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை அமைக்கப்படும்.
இந்த ஆண்டும் அதேபோல் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் இணைந்து பட்டாசு கடைகளைத் திறந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக விற்பனை வேகம் குறைந்து, எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.