நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 67அடி கனஅடியாக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளியாறு, கொட்டக்குடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த வருகிறது.
அதன்படி 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 67கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் இருந்து 6 ஆயிரத்து 458 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 69 கனஅடியை எட்டியவுடன் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.