மும்பை விமான நிலையத்தில் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் அந்தேரியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பசை வடிவிலான ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கபசை பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தங்கக் கடத்தல் தொடர்பாக விமான நிலைய ஊழியர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.