பெல்ஜியம் சிறையில் உள்ள மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டுவரை 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதனையடுத்து மெஹுல் சோக்சி வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.
பின்னர் அவர் பெல்ஜியத்தில் இருப்பது கண்டறியப்பட்டதும், மெஹூல் சோக்சியை கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ அந்நாட்டுக்கு கோரிக்கை விடுத்தது.
அதன்பேரில் கடந்த ஏப்ரலில் மெஹூல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவரது ஜாமின் மனுக்களைத் தொடர்ந்து நிராகரித்தது.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக அவர் நாடு கடத்தப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
மெஹூல் சோக்சி கடந்த 2018-ம் ஆண்டே இந்திய குடியுரிமையை திருப்பி அளித்து விட்டதாகக் கூறுவதால் வழக்கில் சிக்கல் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.