தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரிலேயே தீபாவளியை கொண்டாடுவதால், நகரின் முக்கிய கடைவீதிகளில் இறுதிக்கட்ட விற்பனை இன்று சூடுபிடித்துள்ளது.
ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளியை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள நிலையில், டிக்கெட் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் சிலர் இங்கேயே தீபாவளியை கொண்டாட முடிவு செய்து, புத்தாடைகள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாகத் திருப்பூரின் முக்கிய கடைவீதிகளான புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகிறது. வியாபாரம் வழக்கத்தைவிடப் அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.