திருவள்ளூர் அருகே கனமழை காரணமாகக் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் நாலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால், தெருக்கள் முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காததால் பண்டிகை நாட்களை கூட நிம்மதியாகக் கொண்டாட முடியவில்லை எனவும் அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியில் செல்ல முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் முறையிட்ட நிலையில் ஜேசிபி இயந்திரம்மூலம் கால்வாய் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.