சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
சமீபத்தில் அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், வரும் 1-ம் தேதி முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் சீனாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், நவம்பர் 1-ம் தேதிக்குள் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் தென்கொரியாவில் சீன அதிபரைச் சந்திக்க உள்ளேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.