அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவிருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் முறியடித்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. ஏற்கனவே அவர் மீது ஒருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் மயிரிழையில் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் ஏர் போர்ஸ் ஒன் என்ற தனது தனி விமானத்தில் சனிக்கிழமையன்று பயணித்த டிரம்ப், பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அப்போது விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்த ஏதுவாக உயரமான தளம் அமைக்கப்பட்டிருப்பதை எப்பிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அத்தளத்தை உடனே அகற்றிய அவர்கள், துப்பாக்கிச்சூடு முயற்சியை முறியடித்தனர்.