நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானி, உலக வர்த்தக மைய குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிராஜ் வஹாஜ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸோஹ்ரான் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தப் பதவிக்கான வேட்பாளர்களில் அவரே முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் ப்ரூக்லினில் உள்ள மசூதிக்குச் சென்று தொழுகையில் கலந்து கொண்டார். அப்போது அவர் 1993 இல் உலக வர்த்தக மைய குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும், சிராஜ் வஹாஜ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டின் முன்னணி இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான சிராஜ் வஹாஜ்-ஐ சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்திருந்தார்.
இதற்குஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஸோஹ்ரான் மம்தானியை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு ஸோஹ்ரான் மம்தானி, மதத்தின் காரணமாகவே தனக்கு எதிராக விமர்சனம் வருவதாகத் தெரிவித்துள்ளார்.