அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரிய கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார்.
அப்போது இருவரும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரிய கனிம சுரங்கங்கள் மற்றும் அதன் செயலாக்க திட்டங்களுக்காக, இரு நாட்டு அரசுகளும் தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.