இந்தியாவுடனான வர்த்தக பிணக்குகளுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தியா மீது கூடுதல் வரிகளையும் அவர் விதித்திருந்தார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் அதிக வரிகளை விதிப்பேன் எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெள்ளை மாளிகைமூலம் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.