புதுச்சேரியில் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் தேங்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.