ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்தபோதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை, டிரம்ப் சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
போர் நிறுத்தம்பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பின்னர் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் புதினை நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்தச் சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.