7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!
Nov 5, 2026, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

Murugesan M by Murugesan M
Oct 22, 2025, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு 7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரியுள்ளது.

2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் வாயிலாக லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது.

பிரதமர், முன்னாள் பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் குறித்த ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் உள்ள நிலையில், அவருக்குக் கீழ் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் உள்ளனர்.

இந்நிலையில், ஏழு உயர் ரக பி.எம்.டபிள்யூ., கார்களை வாங்க விரும்பிய லோக்பால் அமைப்பு அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது.

கடந்த 16ம் தேதியிட்ட ஒப்பந்தத்தில், பி.எம்.டபிள்யூ. – 3 வரிசை கார்களை வாங்க புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், வெள்ளை நிறத்தில், ஸ்போர்ட் ரக கார்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Lokpal invites tenders to purchase 7 high-end carsலோக்பால்ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

Next Post

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies