தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிபள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் யசோதை. அவரும் அவரது மகளான ஜெயாவும் தங்களது குடிசை வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், யசோதையும், அவரது மகளும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.