புதுக்கோட்டையில் அடப்பன்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அடப்பன்குளம் நிரம்பியது. இந்நிலையில், உபரிநீர் வெளியேறி அப்பன் வயல் ஒன்றாம் வீதி, இரண்டாம் வீதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.
இதனிடையே, அடப்பன் குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து விளையாடினர்.