தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் போலீசார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
இது குறித்து தமிழ் ஜனம் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டது. இதன் எதிரொலியாக, கூடுவாஞ்சேரி விஷ்ணு பிரியா நகரின் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றியதுடன், அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துகொடுத்தனர்.
மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, புதுநகர் பகுதியில் பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்து, சேறும் சகதியுமாக மாறின. இதனால் அந்த சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்து தரப்படவில்லை எனவும், கடந்த 3 நாட்களாக தங்களை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிப்பை விரைந்து சரி செய்ய வலியுறுத்தி சேற்றுக்கு மத்தியில் நாற்காலியில் அமர்ந்து பொதுக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.