வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும் கன்சால்பேட்டையில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்றபோது சுஜாதா என்பவரை பாம்பு கடித்தது. அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சேலம் மாநகர் பகுதிகளான சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.