சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலை நிலவுகிறது.
கோடம்பாக்கம் சிவன் கோவில் தெரு, பாரதீஸ்வரர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெருக்களில் சாலை பணிகள் முடிவுறாமல் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால்தான் மழைநீரும் கழிவுநீரும் தேங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றனர்.
















