ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு 46 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தற்போது ஒன்றரை லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியதாகவும், அதன் பாதிப்பு பாகிஸ்தானை அதிர செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்கால சவால்களை சந்திக்கும் பொருட்டு ஆயுதப் படைகளை உருவாக்க பல துணிச்சலான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறிய அவர், பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.