உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தபோவதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் உடன்பாடில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு என்பது வீணாண காரியம் என டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்து புதினை சந்திக்க விரும்பவில்லை என்றும், வீணான சந்திப்பில் தமக்கும் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், என்னதான் நடக்கிறது என்பதை பார்க்கலாம் எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.