ராமநாதபுரம் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மற்றும் சூரங்கோட்டை பகுதியில் கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழைநீர் வடியாததால் விளை நிலங்கள் குளம் போல் காட்சியளிக்கின்றன.
மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதற்கு, வரத்துக் கால்வாய்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















