இந்திய ராணுவத்திற்கு 79 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆயுதங்கள் கொள்முதல் குறித்த கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மேலும் 79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க கவுன்சில் ஒப்புதல் அளித்தது. போர்க்கப்பல்கள், 30 எம்.எம். ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன நீர்மூழ்கி குண்டுகள், எம்கே-2 ரக ஏவுகணைகள் உள்ளிட்டவை வாங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
















