அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் விளம்பர சர்ச்சைக்குப் பிறகு கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க வரிகளை விமர்சிக்கும் நோக்கில் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் குரலில் ஒரு ஜோடிக்கப்பட்ட விளம்பரத்தைக் கனடா பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கனடாவின் செயல் உச்சநீதிமன்றத்தின் முடிவுகள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்கும் முயற்சி எனக்குறிப்பிட்டுள்ள டிரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வரி விதிப்பு மிக அவசியமானது எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
















