வங்க கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வங்காள விரிகுடாவில் மோசமான வானிலை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது வலுவடைந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும், நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிரமடையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதனைதொடர்ந்து 27ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்றும்,
எனவே, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலோர காவல்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடி படகுகள் பாதுகாப்புக்காக அருகிலுள்ள துறைமுகத்திற்கு விரைவில் திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















