விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் நிலையில், வராக நதி அணை நிரம்பி செவலபுரை கால்வாயில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இதனால் நெகனூர் கிராமத்தில் சந்திரன் என்ற விவசாயியின் நிலத்தில் மழை வெள்ளம் புகுந்து முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளது. மழை வெள்ளம் வடிய குறைந்தது 10 நாட்கள் ஆகும் என்பதால் 3 மாத கால நெற் பயிர் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.
ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் மூன்று ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிடப்பட்ட 3 மாத நெற்பயிர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
















