திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கன மழை பெய்ததது.
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சான்றோர் குப்பம்,பெரியாங்குப்பம், கன்னிகாபுரம் ,வீர கோவில், ஆலங்குப்பம், தேவலாபுரம், ஆகிய கிராமங்களில் கன மழை பெய்தது.
மழை வெள்ளம் சாலைகளில் தேங்கியதால் மக்கள் வாகனங்களை இயக்கிய முடியாமல் அவதி அடைந்தனர். வாகனங்களை இயக்க முடியாமல் பலரும் மேம்பாலங்களின் கீழ் பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.
















