சென்னையில் வழக்கறிஞர் பைக் மீது திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் பைக் மீது, விசிக., தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக வீடியோ வெளியானது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கி காயப்படுத்தினர்.
அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்தினர். தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தவரை, உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















