சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தொடர் கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் சுமார் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
















