வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டையில் உள்ள ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
கனமழை காரணமாக மோர்தானா அணையில் இருந்து குடியாத்தம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீரின் வேகம் காரணமாக ஏரிக்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு லிங்குன்றம் என்ற பகுதியில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையறிந்த மீட்புப்படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.
















