கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரில் சென்றால் தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் புதுக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சிமாநில தலைவர் செல்வ பெருந்தகை செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடுவதற்கு தங்களை அழைக்கவில்லை என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறகிறார், இதிலிருந்து சமூக நீதி எங்கே உள்ளது. இந்த ஆட்சியின் கவுண்டவுன்ஸ் ஸ்டார்ட் ஆகியுள்ளயுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணிக்கு தவெக வருவதற்கான பிள்ளையார் சுழி போட்டாச்சு என எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு பிள்ளையார் சுழி போட்டு எந்த காரியம் செய்தாலும் நன்றாக தான் இருக்கும் ஆனால் அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்
கரூர் சம்பவத்திற்கு காரணம் திமுக அரசாங்கம் தான் எனறும், நடிகர் விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
















