உக்ரைன் போர் நிறுத்தம்குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பல்வேறு போர்களை நிறுத்தியதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
எனினும் இருநாடுகளும் தொடர்ந்து மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விரக்தியடைந்த அதிபர் டிரம்ப், புதினுடன் பேசி தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
















