கனமழை காரணமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக யூஸ்டிஸ், போகா ரேட்டன் உள்ளிட்ட நகரங்கள் திரும்பும் திசையெல்லாவெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
15 செ.மீ. முதல் 18 செ.மீ வரை கனமழை பதிவாகியிருப்பதால் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களை வாங்குதற்கு வெளியே செல்ல முடியாத சூழல் நீடிப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மழை பாதிப்பு தொடர்ந்து சில நாட்களுக்கு இருக்கும் என்பதால், தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
















