தெருவில் போட்டு நெல்லை விளையவைப்பது தான் திமுக அரசின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தெருவில் போட்டு நெல்லை விளையவைப்பது தான் திமுக அரசின் சாதனை என்றும் தமிழக விவசாயிகளின் நெல்லினை தெருவில் போட்டுவிட்டு, ஆந்திராவில் இருந்து வாங்குகிறார்கள் என்று சீமான் குறிப்பிட்டார்.
தமிழக அரசு மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களில் அடுக்கி வைத்துள்ளது என்றும் விவசாயிகள் விளைவித்த நெல்லை வீதியில் கொட்டி வைத்துள்ளனர் என்று சீமான் கூறினார்.
சாராயத்தை பாதுகாக்கும் அரசு விவசாயிகள் விளையவைத்த நெல்லினை வீதியில் போடுகிறது என்றும் தமிழகத்தில் மதுவுக்கு உள்ள பாதுகாப்பு நெல்லுக்கு இல்லை என சீமான் குற்றம் சாட்டினார்.
















