உலகம் எந்த வேகத்தில் இயங்குகிறதோ, நாமும் அந்த வேகத்துடன் இயங்க வேண்டுமென மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், உயர்கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளதாகவும் உயர்கல்விக்கு எனப் புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தச் செயற்கை நுண்ணறிவு காலத்தில், நேர்மைதான் அறிவை அளவிட உதவும் கருவி எனக் கூறியுள்ளார்.
அடுத்து நடக்கபோவதை முன்கூட்டியே கணித்தால்தான், நாம் நிலைத்து நிற்க முடியும் என மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
















