வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற ஆண்டு டாஸ்மார்க் விற்பனைக்கு 400 கோடி ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு 600 கோடியாக உயர்த்தி மதுபான விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்ததாகவும் கூறினார். ஆனால் அதையும் தாண்டி 700 கோடிகளுக்கு மேலாக விற்பனை செய்து மக்களை திமுக அரசு குடிக்க வைத்துள்ளதாகவும் அவர் சாடினார்.
கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் சரிபார்ப்பு நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















